திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
எண்ணத் திரங்கல்
eṇṇat tiraṅkal
தனிமைக் கிரங்கல்
taṉimaik kiraṅkal
இரண்டாம் திருமுறை / Second Thirumurai

064. நெஞ்சு நிலைக் கிரங்கல்
neñsu nilaik kiraṅkal

    திருவொற்றியூர்
    கட்டளைக் கலித்துறை
    திருச்சிற்றம்பலம்
  • 1. ஆளாக நின்பொன் அடிக்கன்பு செய்திட ஐயநெடு
    நாளாக இச்சைஉண் டென்னைசெய் கேன்கொடு நங்கையர்தம்
    மாளா மயல்சண்ட மாருதத் தால்மன வாசிஎன்சொல்
    கேளா தலைகின்ற தால்ஒற்றி மேவும் கிளர்ஒளியே.
  • 2. ஒளியாய் ஒளிக்குள் ஒளிர்ஒளி யேஒற்றி உத்தமநீ
    அளியா விடில்இதற் கென்னைசெய் கேன்அணங் கன்னவர்தம்
    களியால் களித்துத் தலைதெரி யாது கயன்றுலவா
    வளியாய்ச் சுழன்றிவண் மாயா மனம்எனை வாதிப்பதே.
  • 3. மாயா மனம்எவ் வகைஉரைத் தாலும் மடந்தையர் பால்
    ஓயாது செல்கின்ற தென்னைசெய் கேன்தமை உற்றதொரு
    நாயாகி னும்கை விடார்உல கோர்உனை நான் அடுத்தேன்
    நீயாகி லுஞ்சற் றிரங்குகண் டாய்ஒற்றி நின்மலனே.
  • 4. மலஞ்சான்ற மங்கையர் கொங்கையி லேநசை வாய்த்துமனம்
    சலஞ்சான்ற தால்இதற் கென்னைசெய் கேன்நின் சரண்அன்றியே
    வலஞ்சான்ற நற்றுணை மற்றறி யேன்ஒற்றி வானவனே
    நலஞ்சான்ற ஞானத் தனிமுத லேதெய்வ நாயகனே.
  • 5. நாயினும் கீழ்ப்பட்ட என்நெஞ்சம் நன்கற்ற நங்கையர்பால்
    ஏயினும் செல்கின்ற தென்னைசெய் கேன்உனை ஏத்தியிடேன்
    ஆயினும் இங்கெனை ஆட்கொளல் வேண்டும்ஐ யாஉவந்த
    தாயினும் நல்லவ னேஒற்றி மேவும் தயாநிதியே.
  • 6. நிதியேநின் பொன்னடி ஏத்தாது நெஞ்சம் நிறைமயலாம்
    சதியே புரிகின்ற தென்னைசெய் கேன்உனைத் தாழலர்தம்
    விதியே எனக்கும் விதித்ததன் றோஅவ் விதியும்இள
    மதியேர் சடைஅண்ண லேஒற்றி யூர்ஒளி மாணிக்கமே.
  • 7. மாணாத என்நெஞ்சம் வல்நஞ் சனைய மடந்தையர்பால்
    நாணாது செல்கின்ற தென்னைசெய் கேன்சிவ ஞானியர்தம்
    கோணாத உள்ளத் திருக்கோயில் மேவிக் குலவும்ஒற்றி
    வாணாஎன் கண்ணினுண் மாமணி யேஎன்றன் வாழ்முதலே.
  • 8. வாழாத நெஞ்சம் எனைஅலைத் தோடி மடந்தையர்பால்
    வீழாத நாளில்லை என்னைசெய் கேன்உன் விரைமலர்த்தாள்
    தாழாத குற்றம் பொறுத்தடி யேன்தனைத் தாங்கிக்கொள்வாய்
    சூழா தவரிடம் சூழாத ஒற்றிச் சுடர்க்குன்றமே.
  • 9. குன்றேர் முலைச்சியர் வன்மல ஊத்தைக் குழியில்மனம்
    சென்றே விழுகின்ற தென்னைசெய் கேன்எம் சிவக்கொழுந்தே
    நன்றே சதானந்த நாயக மேமறை நான்கினுக்கும்
    ஒன்றே உயர்ஒளி யேஒற்றி யூர்எம் உயிர்த்துணையே.
  • 10. துணையாம்உன் பொன்னடி ஏத்தா மனமது தோகையர்கண்
    கணையால் இளைக்கின்ற தென்னைசெய் கேன்என்றன் கண்இரண்டின்
    இணையாம் பரஞ்சுட ரேஅழி யாநல மேஇன்பமே
    பணையார் திருவொற்றி யூர்அர சேஎம் பரம்பொருளே.
  • 11. பொருளேநின் பொன்னடி உன்னாதென் வன்மனம் பூவையர்தம்
    இருளே புரிகின்ற தென்னைசெய் கேன்அடி யேன்மயங்கும்
    மருளே தவிர்ந்துனை வாழ்த்தி வணங்கி மகிழ்ந்திடநீ
    அருளே அருட்கட லேஒற்றி மாநகர் ஆள்பவனே.

நெஞ்சு நிலைக் கிரங்கல் // நெஞ்சு நிலைக் கிரங்கல்

No audios found!